உள்ளுராட்சி தேர்தல் வாக்குகளுக்காக தலைவர் பிரபாகரனின் (Velupillai Prabhakaran) பெயரையும் ஊரையும் நாடாளுமன்றில் உச்சரிக்கும் அளவிற்கு ஆளும் தரப்பினர் வந்துள்ளமையை நாங்கள் வாழ்த்துகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (21) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடற்றொழில் அமைச்சர் உள்ளுராட்சி தேர்தலுக்கு தயாராகும் நிலையிலே பலதரப்பட்ட கருத்துக்களை கூறிகொண்டு செல்கின்றார்.
ஏனெனில், தேர்தல் வெல்ல வேண்டும் என்பதற்காக தலைவர் பிரபாகரனை பற்றியும் அவரது ஊர் பற்றியும் கதைப்பதை நாங்கள் வாழ்த்துகின்றோம்.
ஆனால், வாயால் மட்டும்தான் வட மாகாணத்திற்கும் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கும் உம்முடைய செயற்பாடு இருந்து இருக்கின்றதே தவிர ஆறு மாத ஆட்சி காலத்தில் எதுவும் நடக்கவில்லை” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
https://www.youtube.com/embed/p-yoObqwZ6g?start=11