முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொதுமக்களுக்கான பொலிசாரின் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ​சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சகல பொலிஸ் நிலையங்களுக்கும் புதிய சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பொதுமக்களுக்கான சேவைகள்

அதன் பிரகாரம் பொதுமக்களுக்கான சேவைகள் தொடர்பான 2023.06.02ம் திகதியிட்ட 2749/2023 (நிதி சுற்றுநிருபம் 04/2023) சுற்றுநிருபம் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பொலிசாரின் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு | Increase In Fees For Police Services To The Public

புதிய சுற்றுநிருபத்தின் பிரகாரம் இதுவரை ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரத்துக்காக அறவிடப்பட்ட 300 ரூபா கட்டணம் இரண்டாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே ​போன்று கால்நடை மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் மோப்ப நாய்களை ஒன்றரை மணிநேரத்துக்கு வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அல்லது பாடசாலைக் கண்காட்சிகளுக்கு வழங்குவதற்கு அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா கட்டணம் ஒரேயடியாக இருபதினாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்டணங்கள் அதிகரிப்பு

பொலிஸ் குதிரைகளை ஒன்றரை மணிநேரத்துக்கு பொதுமக்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கான கட்டணம் முப்பதினாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பொலிசாரின் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு | Increase In Fees For Police Services To The Public

முன்னர் அதற்கான கட்டணமாக ஆறாயிரம் ரூபா அறவிடப்பட்டிருந்தது.

அண்மையிலுள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு வாகனமொன்றை இழுத்துச் செல்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட அறுநூறு ரூபா கட்டணம் ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கைவிரல் அடையாள அறிக்கை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்பட்ட நூற்றி ஐம்பது ரூபா கட்டணம் ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுத் தேவைகளுக்காக இதுவரை கட்டணமின்றி வழங்கப்பட்ட பொலிஸ் சான்றிதழ் , இனிவரும் காலங்களில் முன்னூறு ரூபா கட்டணம் அறவிடப்பட்ட பின்னரே வழங்கப்படவுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்