ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளும், பிரபல நடிகையும் ஆவார் ஸ்ருதி ஹாசன். இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
மேலும் விஜய் சேதுபதியின் ட்ரைன் படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சினிமாவில் ஜூனியர், சீனியர் பேதம்.. ஓப்பனாக சொன்ன நடிகை சிம்ரன்
ஸ்ருதி ஒப்பன் டாக்
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். இதில் “நான் ஒரு விஷயத்தை விட்டுட்டேன் என்றால், திரும்பவும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன். நான் என்னால் முடிந்த அளவுக்கு ட்ரை பண்ணினேன். ஆனால், மக்கள் இது உனக்கு எத்தனையாவது Boy Friend என்று கேட்கிறார்கள். உங்களுக்கு ஒன்னு புரிய மாட்டேங்குது. அது உங்களுக்கு வெறும் நம்பர். ஆனால், எனக்கு அத்தனை தடவை நான் தோற்றுப் போய் இருக்கிறேன் என்பதுதான். அதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்.