பிக் பாஸ் புகழ் காதல் ஜோடி பாவனி ரெட்டி மற்றும் அமீர் ஜோடியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. அவர்கள் காதலுக்கு காரணமாக இருந்த பிரியங்கா தான் அந்த திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்து இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு அமீர் – பாவனி இருவரும் ரிசார்ட் நீச்சல் குளத்தில் நெருக்கமாக எடுத்த போட்டோக்களும் வைரல் ஆகி இருந்தது.

ஹனிமூன் போய்ட்டோம்னு நெனச்சிட்டு இருக்காங்க..
இந்நிலையில் பாவனி இன்ஸ்டாவில் தற்போது ஒரு புது பதிவை போட்டிருக்கிறார். “மக்கள் நாங்கள் ஹனிமூன் போயிருக்கிறோம் என நெனச்சிட்டு இருக்காங்க. ஆனால் நாங்கள்” என குறிப்பிட்டு ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போட்டோ தான் அது. நீங்களே பாருங்க.


