நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
மேலும், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில், 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்


