முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் – தொடரும் அவலம்

புதிய இணைப்பு

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய 47 பேர் தற்பொழுது வரை சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்னு நேற்று (12) இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்தில் சி்க்கி 23 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்தநிலையில், தற்போது வரை 47 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருவதுடன் , சிகிச்சை பெற்ற ஏழு பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாம் இணைப்பு 

இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

குழந்தையை காப்பாற்றிய தாயின் பாச போராட்டம் சமூக ஊடகங்களில் பரவி மக்களின் மனதை கலங்க வைத்திருந்தது.       

இந்நிலையில் விபத்தில் தனது குழந்தையை பாதுகாத்து அன்பின் வலிமையை உலகுக்கு உணர்த்திய தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

ஆறாம் இணைப்பு

UPDATE : 06.40 PM : கொத்மலை பேருந்து விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

ஐந்தாம் இணைப்பு

கொத்மலை (Kotmale) – ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர 02 உலங்கு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், விமானப்படை இந்த இரண்டு உலங்கு வானூர்திகளையும் இரத்மலானை விமானப்படை தளத்தில் தயார் நிலையில் வைத்துள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக, இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு பெல் 412 உலங்கு வானூர்திகள் அவசர மீட்பு நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

நான்காம் இணைப்பு

கொத்மலை (Kotmale) – ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து குறித்து
சபாநாயகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு
சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட
கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து
விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலரின் நிலை கவலைக்கிடம்

இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், பேருந்து
சாரதியும் விபத்தில் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த பேருந்தில்
சுமார் 75 பயணிகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில்
காயமடைந்தவர்கள் கொத்மலை பொது வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது
வைத்தியசாலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளிலும்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், காயமடைந்தவர்களில்
பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணை 

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் கொத்மலை காவல்துறையினர், ஓடிக்கொண்டிருந்த
பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக
இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டாக்டர் பிரசன்ன குமார
குணசேன ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை ஆராய்ந்தனர்.

செய்தி – க.கிஷாந்தன்

மூன்றாம் இணைப்பு

ரம்பொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

இரண்டாம் இணைப்பு

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 05 ஆண்களும் 03 பெண்களும் உயிரிழந்துள்ளதாக கொத்மலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழந்துள்ளளர்.

முதலாம் இணைப்பு

குறித்த கோர விபத்து இன்று (11.05.2025) நுவரெலியா (Nuwara Eliya) – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.   

இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவல்துறை விசாரணை

காயமடைந்தவர்கள் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாட்டை உலுக்கிய கோர விபத்து : 47 பேர் தற்போது வரை வைத்தியசாலையில் - தொடரும் அவலம் | Nuwara Eliya Bus Accident 3 Dead 35 Injured

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கோர விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

https://www.youtube.com/embed/Jhk_FfGZxVg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.