அநுராதபுரம், கல்னேவ அருகே தொடருந்து பாதையில் இரும்பு பிளேட்களைத் திருடிய நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – மட்டக்களப்பு தொடருந்து பாதையின் நேகம தொடக்கம் அவுகணைக்கு இடைப்பட்ட பகுதியில் இவர்கள் 46 இரும்பு பிளேட்கள் மற்றும் அதற்குப் பொருத்தப்பட்ட ஆணிகளையும் சேர்த்து திருடியுள்ளனர்.
அத்துடன், அங்கிருந்த வீடொன்றில் இருந்து நெல் மூடையொன்றையும் திருடியுள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது
தகவல் அறிந்து கல்நேவ பொலிஸார் அவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நாளை காலை கெக்கிராவை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலை செய்யப்படவுள்ளனர்.

