முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப் புலிகளை நினைவு கூர இராணுவ பாதுகாப்பு!சீற்றமடையும் நாமல்

விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa )விசனம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  நாட்டின் இராணுவ வீரர்களுக்காகவும், ஒற்றையாட்சிக்காகவும் என்றும் நாம் முன்னிற்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் இராணுவத்தினருக்கு முன்னுரிமை இல்லை.

இராணுவத்தினர் 

நல்லாட்சி அரசாங்கத்தில் இராணுவத்தினர் பழி வாங்கப்பட்டனர். புலனாய்வுப்பிரிவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றன.

விடுதலைப் புலிகளை நினைவு கூர இராணுவ பாதுகாப்பு!சீற்றமடையும் நாமல் | Military Security To Deter Ltte Namal

தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்கியுள்ளன. நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்படுமளவுக்கு புலனாய்வு பிரிவு பலவீனமடைந்துள்ளது.

அரசாங்கத்தால் இடையூறு

புலனாய்வுப்பிரிவை பலவீனப்படுத்திவிட்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரியோசனம் இல்லை. எனவே புலனாய்வுப்பிரிவை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளை நினைவு கூர இராணுவ பாதுகாப்பு!சீற்றமடையும் நாமல் | Military Security To Deter Ltte Namal

விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ், இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இராணுவத்தினரை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தால் இடையூறு விளைவிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்