சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள இணக்கமற்ற
நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரட்ன இந்தக் கோரிக்கையை
விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் தமது பொறுப்புக்களில்
இருந்து விலகி வரும் நிலையை அடுத்தே அவரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெருக்கடி நிலை
குறித்த அமைப்பாளர்கள், உள்ளூராட்சி அமைப்புகளில் தங்கள் வேட்பாளர்கள்
அனைவரையும் சேர்க்க முடியாததால் விரக்தியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
ரோகிணி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கட்சித் தலைமையும் அமைப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு
இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்று கவிரட்ன வலியுறுத்தியுள்ளார்.

