பாடசாலைகளுக்குள் பதிவாகும் மாணவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் பணியாற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,(harini amarasuriya) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை முதல்வர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கல்வி அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,தனது கவலையை வெளியிட்டார்.
மாணவர்களுக்கு எதிரான வன்முறை செயல்கள்
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை எந்த சூழ்நிலையிலும் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகும் போதெல்லாம் உடனடியாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை முதல்வர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் பாடசாலை தலைமையின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

