முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலால் கடத்தப்பட்டோம்! நாடுகடத்தப்பட்ட அனைத்துலக பிரபலம் சீற்றம்!

சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய அரசாங்கத்தால் தாங்கள் கடத்தப்பட்டதாக இஸ்ரேலிய அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்ட அனைத்துலக செயற்பாட்டாளர்களின் ஒருவரான கிரேட்டா துன்பெர்க் (Greta Thunberg)குற்றஞ்சாட்டியுள்ளார்

தமது காசாவுக்கான சுதந்திர கடலணியின் படகு காசாவின் கடற்பரப்பை நோக்கிப் பயணித்த போது அந்த கலம் இஸ்ரேலிய இராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டதாக பரிஸ் விமான நிலையத்தில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன அழுத்தங்களுக்கு உட்படுத்திய இஸ்ரேல் படையினர் 

தம்மை கடத்திச்சென்ற இஸ்ரேலியப்படையினர் உடல் ரீதியான வன்முறைச் செயல்களை தம்மீது இழைக்கவில்லை என்றாலும் கழிப்பறைக்கு செல்வதை தடுப்பது மற்றும் தூக்கத்தை தடுத்தது போன்ற கடுமையான மன அழுத்தங்களுக்குரிய செயல்கள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கிரேட்டா துன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாலை 2:30 மணியளவில் பத்துக்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்ட ஒரு அதிரடிப்படைப் பிரிவு தமது படகை தடுத்து நிறுத்தியதாகவும் தமது படகு இத்தாலியை விட்டு புறப்பட்ட நாளில் இருந்து இஸ்ரேலின் ஆளில்லா வான்கலங்கள் தமது கலத்தை பின்தொடர்ந்து வண்ணப்பூச்சுக்களை தெளித்து அச்சுறுத்தியதாகவும் துன்பேர்க் குறிப்பிட்டுள்ளர்.

கேலி செய்த இஸ்ரேலிய குடிரவரவுத்துறை அதிகாரிகள்

படகில் பயணித்த ஆர்வலர்களை கேலி செய்த இஸ்ரேலிய குடிரவரவுத்துறை அதிகாரிகள் பெரும் ஒலியுடன் பாடல்களை இசைக்க விட்டு தங்கள் முன் நடனமாடிய பின்னர் ஒரு துண்டு பாணுக்காக மூன்று மணி நேரம் காக்கவைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

சர்வதேச கடற்பரப்பில் இஸ்ரேலால் கடத்தப்பட்டோம்! நாடுகடத்தப்பட்ட அனைத்துலக பிரபலம் சீற்றம்! | Kidnapped In International Waters Greta Thunberg

கிரேட்டா துன்பெர்க்கும் இரண்டு பிரெஞ்சு குடிமக்கள் இஸ்ரேலில் இருந்து நாடுகடத்தபட்ட நிலையில் குறித்த படகில் இருந்த ரிமா ஹசன் உட்பட நான்கு பிரெஞ்சு குடிமக்கள் இன்னும் இஸ்ரேலின் தடுப்புக்காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.