புதிய இணைப்பு
பொதுமக்கள் வசிக்கும் மையங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் “சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது” என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என அவர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.
இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது.
“தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான தாக்குதலுக்கு எதிரான தீர்மானமான பதிலடி நடவடிக்கையின் தொடக்கமாகும்,” என IRNA செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
WATCH Iranian hypersonic missiles shower an Israeli target. Not a single missile intercepted. pic.twitter.com/17eK1LzwLb
— The Cradle (@TheCradleMedia) June 13, 2025
இதன்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
இதேவேளை, தாக்குதலில் டெல் அவிவ் பெருநகரப் பகுதியில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
மத்திய இஸ்ரேலில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாகவும், ஜெருசலேம் நகரிலும் வெடிபோன்ற ஒலிகள் கேட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்தங்கள் தாக்குதல்களா, அல்லது எதிர்ப்பு ஏற்பாடுகளா என்ற தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகளில், வானில் பாயும் ஏவுகணைகள் தெளிவாகக் காணப்படுகின்றன.
அத்துடன், டெல்அவிவ் நகரின் உயரமான கட்டிடங்களை முந்தி பெரும் புகைமூட்டம் பறந்துவந்ததாகவும், அது எதனால் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தக்க நடவடிக்கையா, நேரடி தாக்கமா என குழப்பம்
புகைமூட்டம் ஏவுகணை தாக்கத்தால் ஏற்பட்டதா, அல்லது அந்த ஏவுகணைகளை இடைமறிக்கும் முயற்சியால் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த நிலையில், இஸ்ரேல் மீதான பழிவாங்கல் தொடங்கியுள்ளதாக ஈரான் கூறியதாக அதன் அரசு ஊடகமான ஐஆர்என்ஏ சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

