முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்கும் ‘சரோஜா’ திட்டம் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16
வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு
உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில்
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் ‘சரோஜா’ திட்டத்தை
ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித்
லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் வியாழக்கிழமை (12)
இடம்பெற்றது.

இதன்போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.

காரணம்

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”இந்த குழந்தைகள் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்கள் அதனால் இவ்வாறான குற்றம் தொடர்பாக
பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில்
வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு
கிடைப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்கும்

ஒரு பெண் குழந்தைக்கு பாலியல் சீண்டல் நடந்த பின்னர் அதனை முறைபாடு
செய்வதால் பிரயோசனமில்லை எனவே தவறான நடத்தைக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது
தான் சிறந்தது.

அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள்
பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும்

சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தை வெளிநாடு
சென்றிருப்பார் அல்லது தாய், தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள்
இவ்வாறு ஏற்படும் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு
இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

‘சரோஜா’ திட்டம்

பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர்
பாதுகாப்பதே இந்த ‘சரோஜா’ திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ்
உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர்
உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக
நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு இந்த பாலியல் சீண்டல்கள் இல்லாமல்
செய்யப்படவேண்டும் ஏன் என்றால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் இதற்கு சிறுவர்
நன்னடத்தை அதிகாரிகள், வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் பொதுமக்கள்
பொலிஸாருக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்கும்

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தரவின் தயாரிக்கப்பட்ட
இந்த திட்ட நிகழ்வில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மென்டிஸ், உதவி பொலிஸ்
அத்தியட்சகர்கள், பொலஜஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்
பெண்கள் சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்,
வனிதா சேவா, சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள், பிரதேச செயலக சிறுவர் பிரிவு
பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.