முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொல்கத்தாவை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்: கூட்டு வன்புணர்வுக்குள்ளான மாணவி-மூவர் அதிரடி கைது

கொல்கத்தாவில் (Kolkata) சட்ட கல்லூரியில் வைத்து மாணவி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு கொல்கத்தாவில் இதேபோல ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் வைத்து பெண் மருத்துவர் ஒருவர் தாகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில், தற்போது இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலாளியின் அறை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அமைப்பின் கல்லூரி சங்கத் தலைவராக ஆக்குவதாக வாக்குறுதி அளித்து கல்லூரி வளாகத்திற்கு மாணவி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்: கூட்டு வன்புணர்வுக்குள்ளான மாணவி-மூவர் அதிரடி கைது | Student Assaulted At Kolkata Law College

இதையடுத்து, குறிப்பிட்ட மாணவர் ஒருவர் மாணவியிற்கு தகாத முறையில் காதலை முன்மொழிந்துள்ள நிலையில், மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார்.

பின்பு, குறித்த மாணவனும் அவரது இரண்டு நண்பர்களும் மாணவியை வலுக்கட்டாயமாக காவலாளியின் அறைக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி

காவலாளியை அங்கிருந்து விரட்டியடித்த பிறகு மூவரும் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்தி அதனை காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

அத்தோடு, குறித்த விடயத்தை வெளியில் கூறினால் மாணவியின் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாகவும் மாணவியின் காணொளியை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாகவம் மிரட்டியுள்ளனர்.

கொல்கத்தாவை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்: கூட்டு வன்புணர்வுக்குள்ளான மாணவி-மூவர் அதிரடி கைது | Student Assaulted At Kolkata Law College

இருப்பினும், மாணவி பயந்து முடங்காமல் தான் சட்டக்கல்லூரி மாணவி என தைரியத்துடன் செயற்பட்டு காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளித்துள்ளார். 

இதையடுத்து, பார்க் சர்க்கஸ் தேசிய மருத்துவக் கல்லூரியில் மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் தலைமை

பின்பு சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் மாணவர் ஒருவர், தற்போது படித்துவரும் மாணவர் ஒருவர் மற்றும் கல்லூரி ஊழியர் என மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி சித்தரஞ்சன் தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்கத்தாவை உலுக்கிய மற்றுமொரு கொடூரம்: கூட்டு வன்புணர்வுக்குள்ளான மாணவி-மூவர் அதிரடி கைது | Student Assaulted At Kolkata Law College

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அரசியல் தலைமைகளுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்வலையை கிளப்பியுள்ள நிலையில், போராட்டங்களும் வெடித்துள்ளன.

மேலும் சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.