சித்தாரே ஜமீன் பர்
கடந்த ஜூன் 20ம் தேதி பாலிவுட் சினிமாவிலிருந்து வெளிவந்த திரைப்படம் சித்தாரே ஜமீன் பர்.
இப்படத்தில் அமீர் கான் ஹீரோவாக நடித்திருந்தார். தமிழில் வெளிவந்த கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.எஸ். பிரசன்னா இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தில் அமீர் கானுடன் இணைந்து நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சீதா விஷயத்தில் அண்ணாமலை சொன்ன வார்த்தை, தவிப்பில் மீனா.. என்ன நடக்குமோ, சிறகடிக்க ஆசை புரொமோ
பாக்ஸ் ஆபிஸ்
சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் 10 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அமீர் கான் நடிப்பில் உருவாகி வெளிவந்த இப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

