எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் தொடர்ந்து தலைமறைவாக ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் தலைமறைவாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் ஜனனி மற்றும் மற்ற பெண்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜனனி தொடங்க இருக்கும் புது தொழிலை எப்படியாவது கெடுக்க வேண்டும் எனவும் பல விஷயங்களை செய்து வருகிறார் குணசேகரன்.

இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோவில் ஜனனி தனது ஹோட்டலுக்கு குணசேகரனின் அம்மா அந்த காலத்தில் செய்த டிஷ்களை எல்லாம் மெனுவில் சேர்க்கலாம் என திட்டம் போடுகிறார்.
மறுபுறம் குணசேகரன் மற்றும் தம்பிகள் போலீசிடம் இருந்து தப்பிக்க மலை உச்சிக்கே சென்றுவிடுகின்றனர். ப்ரோமோ இதோ.

