நடிகர் அப்பாஸ் 90களின் பிற்பகுதியில் தொடங்கி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர். காதல் தேசம் தொடங்கி படையப்பா, ஆனந்தம், மின்னலே உட்பட ஏராளமான படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
2015க்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு அவர் பல கஷ்டங்களை பெற்றதாகவும், பைக் மெக்கானிக் உட்பட பல வேலைகளை செய்ததாகவும் கூறி இருந்தார்.

புது லுக்
நடிகர் அப்பாஸ் தற்போது புது லுக்கில் ஆளே அடையாமல் தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் அவர் வில்லனாக நடிக்க சரியான லுக் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.



