110 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (15.07.2025) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
மேலதிக விசாரணை
சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து நேற்றைய தினம் காலை 08.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து 195 தங்க பிஸ்கட்டுகளும் 13 கிலோ கிராம் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

