முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா என்ற இலங்கை பெண் ஒருவர் தனக்கு நிகழும் அநீதிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு குப்பைத் தொட்டியிலுள்ள உணவை உட்கொள்வதாகவும் தகாத முறைக்கு தான் உட்படுத்தப்பட்டு துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அது குறித்த கருத்துக்களை தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, தன்னை காப்பாற்றுமாரு கோரி அவர் காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

முகம் கொடுக்கும் துன்பங்கள்

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குருநாகல் திம்புலாகல பகுதியில் இருந்து சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா என்ற பெண் தகாத முறைக்கு உட்படுத்தப்படுவதோடு, மற்றும் பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் | Plight Of Sl Woman Went To Saudi For Employment

மேலும், குப்பைத் தொட்டியில் போடும் உணவையே தான் உட்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் உள்ள வெளிநாட்டு முகவர் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜுலை 03 திகதி சவுதிக்கு சென்ற அவர் முதலில் ஒரு வீட்டில் வேலை செய்யும் போது பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு கோரிக்கை

அதன் பின்னர் தான் முகவர் நிலையத்துக்கு வந்த போது வேறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவம் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம் | Plight Of Sl Woman Went To Saudi For Employment

இதன்படி தான் உடம்பில் சக்தி இழக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மகள், தனது தாய் இந்த விடயங்களை தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது தொடர்பில் முகவர் நிலையத்திற்கு கதைத்தபோது எட்டு இலட்சம் பணத்தை செலுத்தியபின்னர் கதைக்குமாறும் தெரிவித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தனது அம்மாவை இலங்கைக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.