தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன, இவ்வருடத்தின் மிக மோசமான நாடாளுமன்ற வருகைப் பதிவைக் கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிக்குள் அவர் ஒரு தடவை மாத்திரமே நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
சுகத் திலகரத்னவுக்கு 217 வது இடம்
ஒரேயொரு தடவை மாத்திரமே நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

manthri.lk இணையத்தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளின் பிரகாரம் அட்டவணைப்படுத்தப்படும் பட்டியலில் சுகத் திலகரத்னவுக்கு 217 வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் 159 உறுப்பினர்களில் அவர் 157 இடத்தில் மிகப் பலவீனமான நாடாளுமன்ற செயற்பாட்டைக் கொண்ட அரசியல்வாதியாக பட்டியலிடப்பட்டுள்ளார்.

