கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலனறுவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (17) காலை 08.30 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி காலை 8.30 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, கிழக்கு அலையின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை
இந்த காலகட்டத்தில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் பலத்த மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


