முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு – கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீரமைக்குமாறு கோரும் மக்கள்

மட்டக்களப்பு – கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீரமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மட்டக்களப்பு  மாவட்ட கமக்கார சங்கங்களின் சம்மேளன செயலாளர் நிரஞ்சன், “கோட்டை கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்கள் மணலால் மற்றும்
புற்களால் அடைபட்டுள்ளதால் மழை காலத்தில் வெள்ள நீர் கடலுக்குள் வழிந்தோட
முடியாததையடுத்து மட்டக்களப்பு மற்றும் குடிமனைகள் வயல் நிலங்கள் வெள்ள
நீரில் மூழ்கி பாதிக்கப்படவுள்ளன. 

எனவே அடைப்பட்டுள்ள இந்த பாலத்தின் வடிச்சல்
குழாய்களை சீர் செய்து விவசாயிகளையும் மக்களையும் இந்த அழிவில் இருந்து உரிய
அதிகாரிகள் காப்பாற்ற வேண்டும். 

குழாய்கள் அடைப்பு 

அம்பாறை மாவட்திலுள்ள மழைவெள்ள நீர்கள், மற்றும் இங்கினியாகலை குளத்தின்
மேலதிக நீர், மண்டூர், வெல்லாவெளி பிரதேசங்களில் இருந்து வரும் வெள்ள நீர்
இந்த பாலத்தின் ஊடாக வடிந்து கடலுக்கு செல்லும்.

மட்டக்களப்பு - கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீரமைக்குமாறு கோரும் மக்கள் | Batticaloa Kallaru Bridge Drainage Pipes Repaire

இவ்வாறான நிலையில் கடந்த 2004 சுனாமி அனர்த்தினால் முற்றாக பாதிக்கப்பட்டு
இந்த பாலத்தை ஜப்பான் மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டு நிதியினை கொண்டு இந்த
பாலம் அமைக்கப்பட்டு பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த பாலத்தில் 20க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள்
அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 10க்கு மேற்பட்ட வடிச்சல் குழாய்கள் மணல் மற்றும்
புற்களால் முற்றாக அடைக்கப்பட்டுள்ளதால் இதனூடாக கடலுக்கு நீர்வடிந்தோட
முடியாததையடுத்து வயல் நிலங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றம் ஏனைய
குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் மூழ்கி பாதிக்கப்படுகின்றன.

இதனால்
விவசாயிகளுக்கு பல இலச்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றதுடன் மக்கள் துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

உரிய நடவடிக்கை 

பாலத்தின் வடிச்சல் பகுதி அடைக்கப்பட்டது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தெரிவித்த போது எவரும் இதுவரை எந்தவிதமான
நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு - கல்லாறு பாலத்தின் வடிச்சல் குழாய்களை சீரமைக்குமாறு கோரும் மக்கள் | Batticaloa Kallaru Bridge Drainage Pipes Repaire

அதேவேளை இந்த பாலத்துக்கு பொறுப்பான
திணைக்களம் இந்த பாலத்தை பராமரிக்காததால் ஆலைமரம் மற்றும் அரச மரம் பாலத்தில்
வளர்ந்து வருவதால் பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டுவருகின்றது.

அதேவேளை, இந்த பிரதான பாலத்தின் ஊடாக பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட
உரியதரப்பினர் பிரயாணம் செய்கின்றனர் அவர்களும் இதனை கவனிப்பதாக இல்லை. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுத்து இங்குள்ள இயந்திரங்களை
பாவித்து இதனை உரிய அதிகாரிகள் சீர் செய்து வரும் வெள்ள அனர்த்த அழிவில்
இருந்து விவசாயிகளையும் மக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.