நாட்டில் ஏற்பட்ட புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டம் முசலி பிரதேச
செயலாளர் பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்ட போதும் முசலி பிரதேச
செயலாளர் மக்களுக்கு உரிய பணியை முன்னெடுக்கவில்லை என முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இரவு பகல் பாராது
கடமையை முன்னெடுத்த கிராம அலுவலர் ஒருவருக்கு எதிராக பிரதேச செயலாளர்
நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முசலி பிரதேச அமைப்புக்கள் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
க.கனகேஸ்வரனிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
அசமந்த போக்கு
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கம் காரணமாக மன்னார் மாவட்டமும்
பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர்
பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டது.

எனினும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வேப்பங்குளம், 4ஆம் கட்டை
,மருதமடு,பிச்சைவானிபநெடுங்குளம் போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
குறித்த கிராமங்களுக்கு தேவையான உடனடி அடிப்படை தேவைகளை வழங்குவதில் முசலி
பிரதேச செயலாளர் அசமந்தமாக செயல்பட்டமை தொடர்பில் மக்களால்
சுட்டிக்காட்டப்பட்டு குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.




