முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் கட்சிகளை நோக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி

13ஆம் திருத்த சட்டத்தை வேண்டாம் எனக்கூறும் தமிழ் கட்சிகள் அதை விட அதிகாரம் உள்ள ஒரு அரசியலமைப்பை தமிழ் மக்களுக்கு கொண்டு வருவோம் என்று மக்களுக்கு ஆணை வழங்க முடியுமா
என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தந்தை செல்வா நினைவரங்கில் இடம்பெற்ற ரெலோ அமைப்பின்
வீரர்கள் தின நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்
இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகளிடத்து நிலையான ஒரு கூட்டு
இல்லாமை மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுப்பதில் பாரிய சவால்களை
எதிர்கொண்டு வருகிறது.

கட்சிகளின் கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13ஐ நடைமுறைப்படுத்துமாறு தமிழ் கட்சிகள்
கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில் சிலர் 13 ஐ வேண்டாம் என
கூறுகின்றார்கள்.

தமிழ் கட்சிகளை நோக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி | 13 Amendment Tamil Parties Tamil People

நான் அரசியல் கட்சி சார்ந்தவன் அல்ல நான் ஒரு ஊடகவியலாளர். பதின்மூன்றை
வேண்டாம் எனக் கூறுபவர்கள் பதின்மூன்னறில் உள்ள அதிகாரங்களை விட கூடுதலான
அதிகாரங்களை பெற்று கொடுப்போம் என மக்களுக்கு உறுதி வழங்க முடியுமா?.

என்னைப் பொறுத்தவரையில் பதின்மூன்றை நிராகரிப்பவர்களால் மக்கள் முன் உறுதி
வழங்க முடியாது.

பதின்மூன்றாவது திருத்தம் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் அமைப்பில்
இருக்கின்ற விடயம் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இன்றும் அரசியலமைப்பில் 13
இருக்கிறது. அல்லாவிட்டால் வடக்கு கிழக்கு பிரிந்தது போன்று தூக்கி
எறியப்பட்டிருக்கும்.

13ஆம் திருத்த சட்டம் 

13 தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய அதிகாரங்கள்
இல்லாவிட்டாலும் சிலவற்றை சாதிக்கக்கூடிய அல்லது கையால கூடிய அதிகாரங்கள் 13இல் இருக்கிறது.

மாகாண சபை ஆட்சி அதிகாரம் தமிழ் தேசிய கட்சிகளிடம் இருந்தபோது அதை சரிவர
பயன்படுத்தினோமா இல்லை தரகு அரசியல் செய்தோம்.

தமிழ் கட்சிகளை நோக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி | 13 Amendment Tamil Parties Tamil People

மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரம் காலத்துக்கு காலம் பறிக்கப்பட்டு வந்தது உண்மை
இருந்தாலும் இருக்கின்ற அதிகாரங்களை ஏன் நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதற்கு
நாங்களே பொறுப்பு.

சமஸ்டி தொடர்பில் பேசுகிறோம் தற்போது உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் இடம் பெற்று
சபைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் ஆடசி மன்றங்கள் அனைத்தும் ஒற்றை ஆட்சி அரசியலமைப்பின் கீழ்
அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிராகரிக்கிறோம் என யாராவது கூற முடியுமா.

ஆகவே 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு அதைவிட அதிகாரம் உள்ள
திருத்தத்தை கொண்டுவர முடியுமா என சிந்திப்பதே நடைமுறை சாத்திய விடயம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.