மாதிவெல பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய போலி விடுதி ஒன்று மிரிஹான காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று (03) இரவு நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, விடுதியின் முகாமையாளராக செயல்பட்ட ஒருவர், இரு பெண்கள் மற்றும் மேலும் இரு ஆண்கள் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள், வயது 22 மற்றும் 24 ஆகியோர், பாதுக்க மற்றும் பூடலு ஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட ஆண்கள், வயது 22, 25 மற்றும் 33 ஆகியோர், திக்வெல்ல மற்றும் பன்னிபிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மிரிஹான காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

