பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் இப்போது ஒரு சாதாரண மனிதர் என்று பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தெடார்பாக செயலாளர் மேலும் கூறுகையில், அவர் அதிகாரபூர்வமாகப் பெற வேண்டிய எந்த சலுகைகளையும் இனி பெறமாட்டார்.
அவர் இப்போது ஒரு சாதாரண மனிதர்
அவர் இனி ஒரு காவல்துறைஅதிகாரியோ அல்லது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியோ அல்ல. அவர் இப்போது ஒரு சாதாரண மனிதர். அதிகாரபூர்வமாகப் பெற வேண்டிய எதையும் அவர் பெறமாட்டார்.
அவருக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், அதை அவர் கேட்க வேண்டும். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவுடன், அவர் பெற்ற அனைத்து அதிகாரபூர்வ விஷயங்களும் அகற்றப்படும் என்றார்.