பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சி தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற போது கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டார்.
இவர் தனது பதவிக்கான பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில விடயங்களை மறைப்பதற்கு ஒத்தாசையாக இருந்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் குறித்த நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பான மகஜர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியும் அறிவித்துள்ளது.