ஐ.நா ஆணையாளர் அறிக்கையிலே தமிழ் மக்கள் மீதுதான் இந்த இனப்படுகொலை நடைபெற்றது. தமிழ் மக்கள் மீதுதான் யுத்தம் புரியப்பட்டது யுத்தத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான என்ற சொற்பதங்கள் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது நேரடியாகவே உலகம் பார்த்துக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற படுகொலையாகும்.
தமிழர்களுக்குத்தான் இங்கு அநீதி இழகை்கப்பட்டது என்பதைக் கூறாமல் இதை உள்நாட்டுக் கலவரமாகவே பார்க்கின்றார்கள்.
மேலும் ஐ.நாவினுடைய அறிக்கையானது திருப்தியானது அல்ல என்று கூறிய அதேவேளை அறிக்கையை தாம் முற்றாக நிராகரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

