கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வெளியில் வரவேண்டும் என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்னும் பிணையில்லை..
தன்னுடைய எக்ஸ் தளத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
Very much looking forward to President Ranil Wickremesinghe returning home shortly. @RW_SRILANKA
— Mohamed Nasheed (@MohamedNasheed) August 22, 2025
அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பிணை மற்றும் அது தொடர்பான தீர்மானங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

