சாமர சம்பத் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 74 ஆவது ஆண்டுவிழா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
மேலும் உரையாற்றி அவர், அனைத்துக்கும் காலம் வரும்.அந்த காலம் எமக்கு கிடைக்க வேண்டிய பதவியை தான் கொடுக்கும்.
அநுரகுமார தனியாக பெரும் சிரமத்தின் மத்தியில் ஜனாதிபதியாகினார்.

எல்லேருக்கும் ஜனாதிபதியாக முடியாது. அதேபோல் எல்லோருக்கு தலைவர்களாக முடியாது.ஆனால் தலைவர்களுடன் நல்ல பேச்சாளர்கள் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு தலைவருக்கு முன்னோக்கி செல்லலாம்.
சுதந்திர கட்சி பிளவு
சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கு இருவரின் முட்டிமோதலே காரணமாகும்.2015 ஆம் ஆண்டு தலைவரும் செயலாளரும் முட்டி மோதிக் கொண்டனர்.அதனால் கட்சி இரண்டாக பிரிந்து சின்னாபின்னமானது.

அதனால் பாதிக்கப்பட்டவர் அவர்கள் அல்ல, கட்சி உறுப்பினர்களாவர்.எனக்கு பதவிகள் வேண்டாம் யாருக்கும் பதவியை வழங்குங்கள் நான் அவர்களுடன் இணைந்து சேவை செய்வேன்.
இன்றைய நிலையில் வழக்கு தோக்கல் செய்து கொண்டு போகும் நேரமல்ல.அவற்றைத் தள்ளி வைத்துவிட்டு கட்சியில் இணைந்து வேண்டிய பதவிகளை பெற்றுக் கொண்டு.கட்சியை ஒன்றுப்படுத்துங்கள்.

