முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் ஆட்டுடன் தப்பியோடிய திருடன்: வெளியாகியுள்ள பின்னணி

மட்டக்களப்பில் ஆடு திருட்டு சம்பவொன்று தொடர்பாக முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும், தெரியவருவதாவது, காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை நாள் வாடகையாக ஆயிரம் ரூபாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

சிசிரிவி காட்சிகள்

இந்த நிலையில், முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்துச் சென்ற நபர் சம்பவதினமான நேற்று(05) பகல் மட்டக்களப்பு – கண்ணகை அம்மன் ஆலய பகுதிக்கு சென்று அங்கு வீதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை பிடித்து முச்சக்கர வண்டியில் திருடிக் கொண்டு கடத்தி சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் ஆட்டுடன் தப்பியோடிய திருடன்: வெளியாகியுள்ள பின்னணி | One Arrested In Connection With A Goat Theft

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செயததையடுத்து, அந்த பகுதியிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு முச்சக்கரவண்டியின் இலக்கத்தை கண்டறிந்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, உரிமையாளர் தனது முச்சக்கரவண்டியை வாடகைக்கு வழங்கியதாகவும் இதுவரை அதனை திருப்பி கொண்டுவர வில்லை என தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை

அதன்படி மேற்கொள்ளப்பட் விசாரணையில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் வீதியில் முச்சக்கரவண்டி மற்றம் அதன் ஆவணங்களை கைவிட்டுவிட்டு திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் ஆட்டுடன் தப்பியோடிய திருடன்: வெளியாகியுள்ள பின்னணி | One Arrested In Connection With A Goat Theft

இந்த நிலையில், முச்சக்கரவண்டி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்ததுடன் முச்சரக்கரவண்டியை மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்