கொள்கலன் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பொலிசார் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பு அருகே கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துறைமுகத்தில் இருந்து உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தது.
இரட்டை நிலைப்பாடு
சம்பவம் குறித்து பல்வேறு தரப்புகளும் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த போதும் பொலிசார் அதுகுறித்து விசாரணைகளை நடத்த ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அவற்றை தருவித்த கொள்கலன்கள் தொடர்பாக பொலிஸார் துரித காலத்திற்குள்ளாக பூரண விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அந்தவகையில் கொள்கலன்கள் தொடர்பான சம்பவங்களில் பொலிசார் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

