வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இராணுவத்தினர் இன்று(14)யாழ் நூலகத்தை பார்வையிட்டுள்ளனர்.
வெளிநாடுகள் பலவற்றின் இராணுவ அதிகாரிகள் பலர் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
30 பேர் வரை வருகை
சுமார் 30 பேர் வரை வருகை தந்துள்ளதோடு இன்று குடாநாட்டின் பல இடங்களிற்கும் பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம்(15) நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.









