போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகொன்று தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை தங்காலை ரெக்காவ கடற்கரையில் அண்மையில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் சுமார் 840 கிலோகிராம் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தெஹிபலே என்ற குற்றவாளிக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

