முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகள் உறுப்பினரின் குடியுரிமை! மீண்டும் சர்ச்சைக்குள்ளான கேரி ஆனந்தசங்கரி

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி வருவதற்கு முன்பு நீதிமன்ற பதிவுகளின்படி, அவரது அலுவலகம் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பெண் உறுப்பினரின் குடியேற்ற விண்ணப்பம் குறித்து அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை கோரியமை தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜினி ராஜ்மனோகரன் என்பவரின் குடியேற்றக் கோப்பு தொடர்பான அவரது வழக்கு குறித்து 2019 மற்றும் 2020 க்கு இடையில் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் அதிகாரிகள், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC)-அலுவலகத்திடம் மூன்று முறைவிசாரணைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குறித்த சந்தர்ப்பத்தில் ரஜினி ராஜ்மனோகரன் என்பவர் ஏற்கனவே கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் அந்நாட்டிற்குள் நுளைய முயற்சித்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள்

எனினும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர் கனடாவுக்குள் நுளைய தகுதியற்றவர் என்று குற்றம் சாட்டியதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப்புலிகள் உறுப்பினரின் குடியுரிமை! மீண்டும் சர்ச்சைக்குள்ளான கேரி ஆனந்தசங்கரி | Anandasangaree Immigration Case Of Tamil Tigers

கடந்த வாரம், ரஜினி ராஜ்மனோகரனின் குடியேற்ற முயற்சியை நிராகரித்த அரசாங்கத்தின் முடிவை கனேடிய கூட்டாட்சி நீதிமன்றம் உறுதி செய்தபோது, ​​இந்த விடயம் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆனந்தசங்கரி பொதுப் பாதுகாப்பு அமைச்சரான பிறகு இதுபோன்ற இரண்டாவது வழக்கு இதுவாகும்.

முன்னதான மற்றொரு தமிழீழ விடுதலைப் புலிகளின் “உறுப்பினரின்” குடியேற்ற விண்ணப்பத்தை அங்கீகரிக்க குடியேற்ற அதிகாரிகளை வலியுறுத்தி அவர் கடிதங்கள் எழுதியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அமைச்சரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி இராஜமனோகரனின் வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், “விண்ணப்பங்களின் நிலை குறித்து அறியும் வழக்கமான பணிகள்” என்றும், அமைச்சரின் அலுவலகம் எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.   

தொடர்புடைய செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.