2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கின் ஆறாவது தொடரின் உத்தியோகபூர்வ விளம்பர தூதராக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டின் லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான சரியான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இவ்வாண்டு போட்டி நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டதுடன் 2026 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமான முறையில் குறித்த தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சர்வதேச அவதானம்
இந்நிலையில், 2026 லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கு கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லின் பங்களிப்பு பெரும் அவதானத்தை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு லங்கா ப்ரீமியர் லீக்ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து , இலங்கையின் முதன்மையான T20 போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

