நாமல் ராஜபக்ச அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த தலைவராக மாறியுள்ளார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாமலின் அரசியல் முதிர்ச்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்சவின் நடவடிக்கைகள் மூலம், அவர் முதிர்ச்சியடைந்தவர் என்பதையும், இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய தலைவர் அவர் என்பதையும் நாங்கள் காண்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க செல்லும் போது அங்கு பெருமளவான மக்கள் இருக்கின்றார்கள். மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

சரியான நேரத்தில் எமது கட்சி சார்பில் நாங்கள் சரியான முடிவுகளை எடுப்போம். நாமல் ராஜபக்ச இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவர்.
நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதியாக வருவார். கிராம மக்களும் கூட நாமல் ராஜபக்ச மீதுதான் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவருக்குத் தான் தேர்தலில் வாக்குகளை வழங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

