எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (3) இந்தியாவுக்கு புறப்பட்டார்.
இந்தியாவில் அவர் தங்கியிருக்கும்போது பல இந்திய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பதுடன் தொடர்ச்சியான உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான பயணம்
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


