ரீமேக்
திரையுலகில் ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்தால், அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி மற்றொரு மொழியில் ரீமேக் செய்வார்கள்.

அதே போல் சின்னத்திரையில் மக்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலை மற்றொரு மொழியில் ரீமேக் செய்வது வழக்கம்.
அய்யனார் துணை
அப்படி தற்போது தமிழில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலை ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலில் மதுமிதா, அரவிந்த் செய்ஜு ஆகியோர் நடித்து வருகிறார்கள். தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர்.
View this post on Instagram

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்!
இதில் நடிகர் தீபக் சிங்கி ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஜீ தமிழ் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

