புலம்பெயர் இலங்கையர்களும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்றும் செல்லும் தேர்தல் ஆணையாளருக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,
வாக்களிக்கும் உரிமை
புலம்பெயர் இலங்கையருக்கு வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டோம். ஆனால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது.
இன்றும் கூட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள், அதிவேக நெடுஞ்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் வாக்களிக்க முடியாமல் உள்ளது. அவர்களுக்கு அஞ்சல் வாக்களிப்பும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு நிறையபேர் உள்ளனர். அவர்களுக்கு திறந்த வாக்களிப்பு திட்டம் போன்ற சட்டத்திட்டங்கள் இயற்ற வேண்டியுள்ளது. அதை நாங்கள் வாக்குறுதியாக நோக்குகிறோம்.
அவ்வாறு ஒன்றை செய்வதற்கு எமது நாட்டின் ஜனநாயகம் சக்தி வாய்ந்ததாகவுள்ளது என நினைக்கிறேன்.
இப்போது தேர்தலுக்கு முன்னரே வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.பிரதானமாக சில ஊடகங்கள் செயற்படுகின்றன.

