முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோட்டாபயவுக்கு மீண்டும் நெருக்கடி : உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், முன்னாள் கடற்படை தளபதி, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் உடனடியாக தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“அரகலய” போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பரிசீலித்த பின்னர் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனு பரிசீலனை 

அதன்படி, குறித்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் தங்கள் நிரந்தர வதிவிட முகவரிகளை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டாபயவுக்கு மீண்டும் நெருக்கடி : உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Court Orders Gotabaya Rajapaksa

ஜனக் டி சில்வா, சோஹித ராஜகருணா மற்றும் மேந்தா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் குறித்த மனு பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.