முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் வெள்ளத்தில் சிக்கிய 40 பேர் : அலட்சியத்தால் வந்த விபரீதம்!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசத்தில் கூராய் பிரதேச செயலகப் பிரிவில் 40 பேர் வெள்ள நீரில் சிக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த பகுதியில் 53 குடும்பங்கள் காணப்பட்டுள்ள நிலையில் 40 பேர் இவ்வாறு வெள்ள நீரால் பாதிப்படைந்துள்ளனர்.

அவர்களுள், 27 பேர் தீவிர அபாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கை

இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களை மீட்பதற்காக இராணுவ படகுகள் அனுப்பப்பட்ட போதிலும் அதிக வெள்ள நீர் மற்றும் சிக்கல் நிலைகள் காரணமாக படகுகள் நெருங்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் வெள்ளத்தில் சிக்கிய 40 பேர் : அலட்சியத்தால் வந்த விபரீதம்! | Mannar Manthai 40 People Stucked In Flood

அதிக மேகமூட்டம் காரணமாக உலங்குவானூர்திகளும் குறித்த பகுதியை நெருங்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக, நாளைய தினம் (30.11.2025) குறித்த பகுதியில் நீர் மட்டம் குறைவடைந்ததன் பின்னரே அவர்களை மீட்க வாய்ப்புள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார், ஏற்கனவே விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கையின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசத்தின் குறித்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், எச்சரிக்கையை கருத்தில் கொள்ளாத மக்கள் தற்போது இவ்வாறு வெள்ள நீரில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றி அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

மேலதிக தகவல் – ராஜுகரன்

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்