முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கு காரணமாக நாயாறுத் தொடுவாயில் அமைந்திருந்த மின்சாரக் கம்பம் நீரில் சேதமடைந்தது.
வழமைக்கு திரும்பிய மின்சாரம்
இதனால் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருணாட்டுக்கேணி பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

தற்போது முல்லைத்தீவு மின்சார சபையின் முயற்சியின் பயனாக இன்றையதினம் 03.12.2025 பிற்பகல் மின்சாரம் வழமைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





