நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
அத்துடன் அனர்த்தங்களால் 213 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் இன்று (06) மதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவிய சீரற்ற வானிலையால் நாட்டின் 25 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள்
இந்த அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியில் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


