பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் நான்கு இலட்சம் பெறுமதியில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எந்த அரச அதிகாரிக்கு எவ்வாறு நிதி கொடுக்கப்பட்டது மற்றும் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிதி பகிரப்பட்டது என்பது தொடர்பில் ஒழுங்கான முறையில் தரவுப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் பின்பும் உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

