அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில், அப்பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்கரையில் இருந்த மக்களை
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடுகளில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் இருந்த மக்களை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நேற்று(14.12.2025) சுமார் 1000 பேர் பங்கேற்கவிருந்த யூத சமூகத்தின் மத நிகழ்வான ஹனுக்கா கொண்டாட்டமும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்காக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

