திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலக பிரிவின் இறக்கக் கண்டி கிராம
சேவகர் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவரை அரச உத்தியோகத்தர் ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி திருப்பி அனுப்பிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நீதி
தனது வீட்டில் வெள்ள நீர் புகுந்தமையால் தனக்கும் நிவாரண நஷ்ட ஈடு தொடர்பில்
அங்கு சென்ற போது இந்த நிலை ஏற்பட்டு உளரீதியாக பாதிப்படைந்துள்ளதாக குறித்த
குடும்பப் பெண் தெரிவித்தார்.

இது தொடர்பில் உரிய உயரதிகாரி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



