இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,250,000 ஐக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 2,258,202 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்திய சுற்றுலாப் பயணிகள்
இவ்வாறு வருகை தந்தவர்களில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகளாக இருப்பதுடன் இரண்டாம் இடத்தில் பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தில் ஜேர்மனியும், ஐந்தாவது இடத்தில் சீனாவும் உள்ளன.

அந்தவகையில், இந்தியாவில் இருந்து 510,133 பேரும், பிரித்தானியாவில் இருந்து 204,703 பேரும்,ஜேர்மனியில் இருந்து 141,941 பேரும் மற்றும் சீனாவில் இருந்து 129,403 பேரும் வருகை தந்துள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும் 154,609 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

