முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 20ஆம்
ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று (25) நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கலந்து கொண்டோர்
மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நீதி கோரி போராடப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி
பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர்
பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.








