முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பசிலுடன் நெருக்கமாக செயற்படும் அநுர அரசாங்கத்தினர்! உயர் மட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பசில் ராஜபக்ச தனது உறவுக்காரர் என்ற போதிலும் தற்போதைய அநுர அரசாங்கத்தில் உள்ளவர்களே அவருடன் மிகவும் நெருக்கமாகச் செயற்படுகின்றனர் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என்னை விடவும் பசில் ராஜபக்சவுடன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளனர். அவர் எப்போது நாட்டுக்கு வருவார் என்பது குறித்து என்னிடம் கேட்காமல் அவர்களிடமே கேட்பது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் நிலை குறித்து தற்போதைய அரசாங்க உறுப்பினர்கள் பசிலுடன் தினமும் மாலையில் அவருக்குப் அழைப்பு எடுத்து கலந்துரையாடுகின்றனர்.

உயர் மட்ட அறிவுரை

பசில் ராஜபக்ச உட்பட எவரும் சட்டத்திலிருந்து தப்பியோடவில்லை. பசில் ராஜபக்ச தற்போது வெளிநாட்டில் இருந்தாலும், அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முறையாக தகவல் முன்வைக்கப்பட்டு, தேவையான சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

பசிலுடன் நெருக்கமாக செயற்படும் அநுர அரசாங்கத்தினர்! உயர் மட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரை | Other Governments Working Closely With Basil

சமகால அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தன்னை விடவும் பசில் ராஜபக்சவை நன்றாக அறிவார்கள். சில வேளைகளில் அவர்களின் அறிவுரைக்கு அமையவே அவர் நாட்டுக்கு வராமல் இருக்கிறாரா என்பது தனக்குத் துல்லியமாக தெரியாது.

இந்த விடயத்தை அரசாங்க தரப்பினரிடமும் பசில் ராஜபக்சவிடமுமே கேட்க வேண்டும் என்ற போதிலும், நீதிமன்றச் செயல்முறைகளில் அவரது பிரதிநிதித்துவம் சரியாக இடம்பெற்று வருகின்றது.

சமகால ஆட்சியாளர்களுக்கு மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சர்களுடன் ஒரு தனிப்பட்ட பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது.

விசேடமாக மே மாதம் பிறக்கும் போது மகிந்த ராஜபக்ச, கோட்டாபய அல்லது வேறு ஏதேனும் ஒரு ராஜபக்சவை நீதிமன்றத்திற்கு அழைக்க காவல்துறை  நடவடிக்கை எடுக்கின்றனர்.

அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது ஒருபுறம் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.